அது பருவத்தில் விழும் பல்லாக இருந்திருந்தால்
முளைத்திருக்கும்,
மீண்டும்/
அது உடலின் நிழலாக இருந்திருந்தால்
தொடர்ந்திருக்கும்,
கூடவே/
அது கிணற்றின் தவளையாக இருந்திருந்தால்
நினைத்திருக்கும் உலகம்
நானென்று/
அது நன்றி உள்ள நாயென இருந்திருந்தால்
கண்டதும் ஆட்டியிருக்கும்
நன்றிக்கான அடையாளத்தை/
அது கல்லுமில்லா, மண்ணுமில்லா
காதல் என்றோ ஆகிபோச்சி
கண்ணில்லா கதையுமாச்சி,
மூச்சும் பேச்சுமில்லா சவமாகி
கல்லறைக்காணாமல்
கால்போன பாதையில்
காலம் போச்சி/
தொட்டுத்தெரிந்த தீ காதல்
சுட்டபின் பட்டும் தெரியவில்லை
காதல் தீ தான் என்று?
No comments:
Post a Comment