நம்ம காலம்
+++++++++++
+++++++++++

தலகாணி ஒண்ணு வேணும்_பராசக்தி
தலகாணி ஒண்ணு வேணும்

தானே அது கணிணியாய் மாறும் தரமும்
அதற்க்கு வேண்டும் _பராசக்தி

தொடு திரையாய் அதன் மேலுறை வேண்டும்-அதுவே
நான்காய் மடித்து பையில் வைக்கும்படி வேண்டும்_அதில்

கூடுதலாய் முகநூலின் நண்பர்கூட்டம் வேண்டும்_தினம்
மொக்கைப்போடும் கன்னியர் கோடி வேண்டும்

பத்து பன்னிரண்டு ஜிங்சா போடும் நண்பரும் வேண்டும்_அதுவே
பார்த்தால் யாரும் மறையும் வன்னம் வடிவமைக்க வேண்டும்

தூங்கும்போது எம்பி திரியா காதிற் பாட்டிசைக்க வேண்டும்_துயரத்தில்
கைகுட்டையாய் மாரி கண்ணீர் துடைக்க வேண்டும்,

பார்த்தவுடன் மயங்கும் ஆங்கே பத்து பதினைந்து பத்திணிபெண்
வேண்டும்_வெப்பம் தனிக்க ஏ.சி, இணைத்திருக்க வேண்டும்

தலகாணி வேண்டும் பராசக்தி ,தலகாணி ஒன்னே ஒன்னு
வேணும் ?

No comments:

Post a Comment