ஒரு தொலைத்தூர ஊரிலிருந்து நகரம் நோக்கி
இரவில் பயணமாதலுக்கு ஒப்பானதே முகநூல்,
மெல்ல இருளும் காற்றுமாய் சில்லென்று
முகத்தில் பட ஜன்னலோரம் என் பயணம்
புதிய முகமாக முகநூலில் ஒரு
குதுகலிப்புடன் இனைவது போல்
முன் விளக்கின் ஒளி பாதை விழ
முதலில் நண்பர்களுக்கழைப்பு
நிறைய நண்பிகளும்,நண்பர்களும்
add; செய்து விட்டார்கள் ,
மெதுவேகமாய் பயணம்
அதோ தூரத்தில் நகரத்திற்க்கான அடையாளமாய்
சோடியம் விளக்குகள்,பொட்டு பொட்டாய்
இங்கே நண்பர்கள் >ONLINE
பச்சை விளக்குகள்,விமான நிலைய
அடையாளமாய் சிவப்பு விளக்குகள் புலப்படுவதாய்
சில> NOTIFICATIONS
விளக்குகளும் தென்படுவதாய் சில>MESSAGES
>FRIEND REQUESTS
சில பல கட்டிடங்களா ? மலைகளா தெரியாமல்
>CONFIRM< NOT NOW
சற்றே சோம்பல் முறிப்பாய் என்னுடைய
UPDATE STATUS
நகரம் வருமுன்னே இரயில்வே கேட்,
இருக்க வேகத்தடைகளில் வாகனம் படக் படக்கென்
துள்ளியது துள்ளியது
கேட்டில் என்பக்கம் சிவப்பு விளக்கு
வாகனம் நின்றது >CHATIL< பச்சை விளக்கெரிய
கிளுங், கிளுங்
கேட்டில் நிற்க்கும் வண்டியிலிருந்து இறங்கி
ஆசுவாச படுத்த, பெண் பிள்ளைகளுக்கு
>CHAT
இரயில் வேகமாய் ஊ ஊஊஊ
தொடர்கிறது ,விசாரிப்புகள்
>ANY ELSE< >oke Bye
வாகனம்,
கூவ ஆற்றின் நாத்தம் மூக்கை பதம்
பார்க்க என் பக்க >COMMENT
வசவுகளும் திட்டுகளும் நெடியேறும்
கொஞ்சம் நேசமும் கொஞ்சம் மோசமாகவும்
இடை இடையே திறந்திருக்கும்
டீக்கடை வெளிச்சமாய்
அழகிய புகைப்படங்கள்
இடையில் இறங்கத் தூக்க
கலக்கத்தில் தன் சுமைகளை மற்றவர்கள்
மோதிச்செல்லும் பயணிகளாய்
ONLINE -விட்டுச்செல்லும் நண்பர்
வாகனம் தன் நகர பேருந்து நிலையத்துக்குள்
நுழைய தான் இறங்க ஆயத்தமும்
அவசரமுமாய் குனிந்தே ஜன்னல்
பாதைப்பார்த்தல் தன் STATUS
இறங்கிய பின் தன்னை யாரும்
அழைக்க வரவில்லை என்பது
தான் எழுதிய கவிதைக்கோ?
கதைக்கோ? யாருமே >LIKE< WISH>
பண்ணாதிருக்க வெருமையாய்
LOG OUT>ஆகும் மனது?
No comments:
Post a Comment