பூவின் மொழி அறிந்தேன்

காதலிக்க தொடங்கிய போதே
மலர்களின் மொழி
பயில தொடங்கிவிட்டேன்,

வீதியில் இறங்கும்போதே
தும்பை பூ சொல்லி சிரிக்கும்
துரை கிளம்பிவிட்டார்
துணையாளை தேடி,
வம்பேதும் பண்ணாது
வழி கடப்பேன்,

வழி நெடு பூத்திருக்கும்
செம்பருத்தி
சாடை பேசி
சண்டைக்கிழுக்கும்
பறித்துப்போயேன்
எம்மை
பதியாளின் சடையில்
பின்ன,அவள் உன்
பின்னே வருவாளென்று,

வாத்தியார் வீட்டு
வாசலில் படர்ந்திருக்கும்
மல்லிக்கு
என்னைப்பார்த்தால்
இளக்காரம் தான்
எவளுக்கும் இயற்கையில்
கூந்தலில் மணமில்லை
நாம் பூமியில்
பிறக்கும் வரை
என்று லாவனிப்பாடும்.

மூட்டி மோதி ஒடி
கடக்க அந்த குட்டையில்
பூத்திருக்கும்
தாமரையோ>?
தண்டோடு நானாட
திண்டாடுறேன் ஒரு
பெண்டோடு கூத்தாட
நீ ஓடுற ? என்று
கவிதை சொல்லும்

எல்லாம் கடந்து
என்னவளின் வீட்டில்
பூத்திருக்கும்
ரோஜாவோ ?
எங்கள் தலைவி,
துயில்கிறாள்
எங்கள் தலைவி,
எழுந்து விட்டாள்
எங்கள் தலைவி
உண்கிறாள், என
எனை வெளி நிருத்தி
வேடிக்கை செய்யும்?

மலர்களின் மொழியரிந்த
எனக்கு மெளனமாய்
அவள் சொல்லும்
விழி மொழியறியாது
தேமே என நிற்ப்பேன்?

No comments:

Post a Comment