தீரும் வரை கெஞ்சலாய்
==================

அந்தி மஞ்சள் சாயும்
தருணம்
முந்தி கெஞ்சல் காண

மலர் செண்டுடன்
வண்டாய் சுற்ற
ரீங்காரமிடும் எண்ண
கனவுகளை

கண்ணில் சுமந்து
கன்னியுன் காதுமடல்
சேனையில்
மிக ரகசியமாய்
ஆடும் ஆபரணத்
தொங்கலில்
ஊஞ்சலாய்
ஆடும் மனமிதை

கெஞ்சும் மொழி கேளாய்
நாழிகை போனபின்
மீட்க முடியாதே,
மீட்டும் வீணை
கேட்க முடியாதே,
சொடுக்கிய
வேளையில்  தீரும்
தாபம் ,

நாடகமாய் மறுக்கும்
தருனத்தில்
மடியில் வீழ
விதி ஒன்றை
செய்திட
விரைவோம்
விளையாட்டில்
விதியேதுமில்லை,,,

Comments

Popular Posts