புடவை
அள்ளிச்சொருகி
அடுப்பங்கரை
பெருக்கும்போதிலாகட்டும்
அம்மி
அரைக்கும்போதிலாகட்டும்
செடிகளுக்கு
நீர் வாக்குபோதிலாகட்டும்
முகக்கண்ணாடி முன்
தலை
வாரிக்கொள்ளும்போதிலாகட்டும்
சாம்பாரில்
சுவையரிய
உள்ளங்கையில் ஊற்றி
நக்கும்போதிலாகட்டும்
அ .,
கட்டுக்குள் சொருகியே
ஆட்டுகிறாய்
மெனக்கெட்டு
உன்
பின் கட்டில்
பிம்பமாக
பதுங்கியே
பார்க்கும் என் விழிகெட்டு
போனதென்னவோ
No comments:
Post a Comment