வெள்ளையாய் இருந்தபோது
இதோ ஆயத்தமாகி விட்டேன்,
இதோ என் புறப்பாட்டின் ஏற்பாட்டில்
சதையோடு சருமத்தில் உயிர் கோத்து
எனக்கேற்ப்பட்ட அவமானத்துளைகளை
ஒன்றை அடைக்க ஒன்று மிச்சப்படுகிறது
சல்லடை கண்ணாக துளைகளின் எண்ணிக்கை,
சதை, பேருக்குத்தான் போர்த்தி இருக்கு?
கழற்றி வைக்கப்பட்ட காயத்தின் மீதி
மறைக்க எதிலிருந்து கழற்றப்பட்டதோ
அதில் அடையாளம் தங்கிவிட்டது
மிச்சமான ஊசலில் இருந்த உயிர்
உன்னிடம் கிடைக்கும்
பாயில் இடாதே நோயில் விழலாம்
உன்னுயுருடன் கலக்க முடியுமா பார்
துளைகளில் வீச்சம் இருக்கும்
அனுப்பிய தொகையின் வீச்சத்தைவிட
இது சற்றே குறைவுதான்/
சந்திப்பில் கிடத்தப்படும் இதை
சங்கடத்தில் ஆழ்த்தாதே
சற்றேனும் தள்ளி நின்றேனும் பார்?
புழுக்கள் நெழிய ஆரம்பித்து விட்டது
குருதியில்லா புழுக்கள் அவை
என்போல்/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment