ஒரு உருவாய் நீ வெளிவருவாய்
மனக் குழைவாய் தாய் குழைவாள்
நீ குழந்தையாய் பிறந்தாய்
நீ குழந்தாய்,
தானே தவிப்பாய்
தானே முனதருவாள் மார்பை
உணவாய் உன் வாய்
உரிவாய் அழகாய்>, உணர்வாள்தாய்
குறைவாய் நீ உணர்ந்தால்
குதிப்பாய் மடியில்
மாற்றித்தருவாள் மார்பை
உன் கடிவாய் சொர்க்க வடிவாய்
என நிறைவாள்
நீ குழந்தாய்,
பின் கத்தாயோ? நீ உண்ட மயக்கத்தில்
உறங்கித்தான் போவாய்
நீ குழந்தாய்,
உருள்வாய் ஒழுகாய்
தவழ்வாய் தானாய்
எழுவாய் பின் இயலாமல் விழுவாய்
அழுவாய் தாய் தரையிடம் சண்டையிடுவாள்
தள்ளிவிட்டதாய் தரையை தட்டுவாள் போலியாய்
கண்டுமகிழ்வாய்
நீ குழந்தாய்,
யாழாய் மழலை தேனாய் வாய் திறப்பாய் முப்பாலுக்கு அப்பாலும்
உன் உளருவாய் அமுதாய்
தருவாய் நீ
நீ குழந்தாய்
தள்ளாடி தள்ளாடி நடப்பாய்
வியப்பாய் அழைப்பாள் தாய்
உன் தகப்பனை சிரிப்பாய்
விரல் பிடித்து நடப்பாய்
மூலையில் கிடக்கும் பந்தை எடுக்க
ஏவிடும் தாய் உன் தத்தக்கா புத்தக்கா
நடைக்கண்டு மெய் மறப்பால்
விரல் விட தனியே இனி
வெளியேறத்துடிப்பாய்
நிமிட நேரம் உன்னை காணாது
துடியாய் துடிப்பாள் உன் தாய்
கட்டிலின் அடியிலோ பாய் அடுக்கும்
பந்தலிலோ இருந்து எட்டிப்பார்த்து சிரிப்பாய்
நீ குழந்தாய்
மசித்து தரும் உணவை உன் தாயின் வாய்
ஏற்ப்பாய் கொஞ்சம் இறைப்பாய்
கொஞ்சம் உமிழ்வாய் வாய் வடியும்
நெஞ்சில் இதையும் இனிப்பாய் தின்பாள்
உன்பால்தாய்
நீ
குழந்தாய்,
வளர்வாய் வாகாய் செல்வாய்
தமிழ் குடிக்க செரிவாய்
உணர்வாய் உலகை
இனி ஆனாய் , ஆணாக, பெண்ணாக ஆவாய்
இதற்க்கு முன்
நீ
குழந்தாய்,
No comments:
Post a Comment