உறக்கம் இன்பம்
----------------------
பிதற்றல் இல்லா ஆழ்நிலை தியானத்தின்
உச்சாடனமாய் உன் தூக்கத்தின் கொள்ளல்
ஏதும் உன்னில் கலப்பதோ வெளியேருதலோ
அறியாமல் உன்னை நோக்கிய பார்வை
உன் கனவின் தொடரில் புதிய வண்ணம் பூசியதாய்
பெருமிதம் ?வெளியுலகின் தொடர்பில்லை
இப்போதுனக்கு பிரஞ்ஞை இல்லா உடலின் இருப்பு
பேசியது,அழுதது, சிரித்து என வேறு வேறு
உருமாற்றம் இந்த உடம்பிலிருந்துதானா?
கொடுத்ததும்,பெற்றதும் இந்த உடம்பிலிருந்துதானா?
இங்கே இப்போது ஏதும் அதைபற்றிய
அரிதல் உண்டாகுமா?படித்ததும், பார்த்ததும்
எதில் கிடக்கிறது தனித்தனியா பிரித்தால்
தூக்கம் வேறு? நீ வேறு என ஆகுமோ?
உள்ளிளுக்கும் காற்றும் வெளியேறும் காற்றும்
இப்போது உன் முயற்ச்சியால்
நடக்கிறதா? இல்லை என்றால் நீ எங்கே?
ஆம் என்றால் ஒரு பேசுதல் செய் உன் தூக்கம் எங்கே?
இருந்தும் இல்லாதிருப்பதென்பது இதாகுமா?
தூக்கம் ஓய்வா?ஓய்வென்றால்
ஊடுருவல் இல்லாதிருப்பதா?
தூக்கம் அமைதியளிக்கிறதா?
தூக்கம் ,துக்கத்திலிருந்து விடுதலை தருகிறாதா?
தோதாய் வாழ தோழா தூங்குவோரை
தொடாமல் தொழு
எழுப்பாதே இனிதாய் தொடரட்டும்
உன் தூக்கம்

No comments:

Post a Comment