வெள்ளையாய் ஒரு மயில்
பனை மட்டையில் காற்றாடி செய்து
கருவேலமுள்ளில் குத்திட்டு
காற்றின் எதிர்ப்பில் காட்டிச் சென்றபோது
எதிரே காற்றுடன் வந்து எனக்கும்
இது போல் ஒன்று செய்து தா!
என்று கேட்டவள் தானே நீ?.,,
கூர் உடைந்த பென்சில் சீவ
சீவியதென்னவோ விரலை
வேதனையாய் விரல் பிடித்தழ
ஒரு சோதனையாய் என் விரல்
எடுத்து வாயிலிட்டு குருதி
குடித்தவள் தானே நீ?.,,
திறக்க முடியா பேனா மூடியை
திறந்தேனும் தாடா என்று
என்னை மட்டும் கேட்டு ஏங்க
பலர் முன் பலசாலியாய்
பல்லால் கடித்தே நொருக்க
பளிச் சென்று கிள்ளி சென்றவள் தானே நீ?.,
பூத்திட்ட மரம் வாடை தரும்
நீ பூ தீட்டாய் ஆனதரிந்தே
வாசல் வந்தே தெரு விளக்காய்
தலைக்குனிந்தே ,மரக்கதவின்
பின் நின்று ,முன் விரல்
கோலம் செய்து சிட்டி பாவடை
சிரிதே தூக்கி கொலுசால்
ஜல்,, ஜல்,என சைகை செய்தவள் தானே நீ?.,
கல்லூரி பயணத்தில் ,பஸ்
படியில் பயணம் செய்ய
கடிந்தே முனகி கண்ணால்
மேலே வா என்று மேலிழுத்தவள் தானே நீ.,,
பனியாய் உருகி காலம் கடந்தே
கடலின் அலைத்துரத்தலை
சேர்ந்து வரும் ஒரு முறை என்றே
காத்திருக்க, சேர்ந்து வந்தாய்
உன்னவனுடன், சோர்ந்தே
போவேன் என்று என் தெருபையன்
என அறிமுகம் செய்து வைத்தவள் தானே நீ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment