சரிக்கு சரி என்க
------------------------
பூர்த்தியாக ஒரு புன்னகை
கொண்டே அவர்களை
சந்திந்தாக வேண்டும்
அவர்கள் மேல் வர்க்கம்
தேவையுள்ளவர்கள் கீழ் வர்க்கம்
மேல் கீழ் வருடும் வார்த்தைகளில்
நக்கித்தான் பெற வேண்டி
இருக்கிறது,
சரிதானா என்றால் தலை ஆட்ட
வேண்டும், மாடு ஏன் நினைவுக்கு
வருகிறது ?
தவறுதானே என்றாலும் அதே
ஆட்டல் தொடரனும்
பெறும் வரை பொத்தாம்
பொதுவான வார்த்தைகளை
கவனமாக கையாளனும்
மூக்கு சிந்தி திரியும் மேல்வர்க்க
வாரிசை புத்திசாலி பாருங்க
என்று புணர்வுக்கு சமமான
வார்த்தை நுழைத்து
இன்பம் கொடுக்க வேண்டியுள்ளது
தேவையுள்ளவர்கள் கீழ் வர்க்கம்
பெற்று புறப்பட அவர்கள்
கொடுக்கும் அனுதாபமோ
அக்கரையோ தெரியாது?
அவர்கள் ஒரு வழி போட்டுத்
தரும் மேதை என
அறிவுரை பகரும் போது
மாதம் முடியு
தீட்டு துணியென
வீசத்தோணும் பெற்றதை
என் செய்ய
தேவையுள்ளவர்கள் கீழ் வர்க்கம்
No comments:
Post a Comment