குடையாய் கொட்டும்
------------------------------
------------------------------
மழையில் மட்டும் உன் ஞாபகம்
மடக்கியே மக்கிய நிலையில் நீ
ஏறிட்டும் பார்க்காத எத்தனைய்யோ நாட்கள்
சில நேரம் எராவான இடுக்கிலும்
சில நேரம் பரணின் எட்டாத தூரத்திலும்
நீ
தேட ஆரம்பித்து நேரம் கழிகிறது
எங்கே போனாயோ ?கடைசியாய்
போன மழைக்காலத்தில் உன்னை சுமந்த
நாட்கள் நிழலாட தேடுகிறேன்
உன்னை, விட்டு போனாயோ
கெட்டுப்போனாயோ உன்னை ஒட்டுப்போட்டேனும்
வைத்திருக்க வேண்டும் என
விட்டுபோன எந்தாயின் கட்டளை
நீ நனைந்து என்னை நனைக்காத
உன் கீழ் நான்
நீ மழையை ரசிக்கின்றாய்
உன்மேல் பட்டுத்தெரிக்கும்
துளியை பயந்தே ரசிக்கின்றேன்
குடையே
No comments:
Post a Comment