அழ பிறக்கவில்லை


விளையாட்டாய் நடந்த எம் காதல்
சந்தையில் எனக்கான
பொருளாய் நானும் ,அவனுக்கான
பொருளாய் பண்ட மாற்று
நடந்தேரியது

கூட்டிய பொருள் கூட.
கூடலில்
இரு கண்மனி கவிதைகள்
கையிருப்பாய் ஆனது

அவனுக்கான தேவையில் 
சேவை எம் பாக்கியம் ,
குதுகலித்து ம்னதிழைப்பில்
வார்த்தைகளையும்
வாழ்க்கை நடத்தையிலும்
வசந்தம் தவிர எம்மை
ஏதும் அண்டவில்லை,

கவிதைகள் காவியமாயின
கனவுகள் எம் கண் முன்
ஓவியமாயின
கற்றும் பெற்றும் காலம்
தன் இயந்திரத்தை
ஒரு முழு சுழற்சியின்
கடைசி நொடிகாய்
காத்திருக்க

மலை என வீழ்ந்தான் எம்
மணவாளன் சற்றேனும்
நிலை குழையா அவன்
தந்த பயிற்ச்சியின்
காரணமே எம்மில்
கலக்கமில்லை
கண்ணீர் இல்லை,

உற்றும் பற்றும் ஒப்பாரியும்
ஊலையிடலும்,ஓங்கியறைந்தழுதலும்
என் கண்ணில் நீர் வரவழைக்க
வில்லை ஏன் அழவேண்டும்
வலித்தால் அழு அடியில்,
மனம் வலித்தால் தொழு மனதில்
என சொன்னவன் என் மன்னவன்
அவன் சவத்தின் முன்
எப்படி முடியும் என்னால்,

காவியமான எம் பிள்ளைகலும்
கையை பிசைந்த படி 
இருந்தார்களேயொழிய
கண்ணீர் தரவில்லை
தந்தையின் சொல்லாய்
வாழும் பிள்ளைகள்,

வெரித்த பார்வையோ,
விட்டேத்தி நிலையில்
நடிக்காமல் இருந்த என் நிலை
கண்டு
எம் உறவோ
திட்டித்தீர்த்தன மனதிற்குள்

என் மன்னவன் தேர் ஏறி
ஊர்கோல கோலம் பூண்டு
ஒய்யாரமாய் சென்றுவிட்டான்
வீதி வரை சம்பிரதாய 
வைபவத்தில் திரும்பாதே
என தீட்டென பழக்கம்
போதித்து அழு வென
அதிகார தோரணை\

எல்லாம் முடிந்து இல்லம்
வரும் எம் வாரிசின்
சின்னவன் மட்டும்
பாவம்,

தகப்பனின் கையிலேயே
உறங்கிய பழக்கம்
இனி யார் கைதருவார்
தகப்பனாய்,
விம்மலும் விசும்பலும்
உன் முன் நடக்கவில்லை
கண்ணாளா.
,போதும்
இனி என்னுள்
அழத்தயறாகிவிட்டென் 
என் காலம் தீருவரை,

உன் பொருட்டு ஒரே வேண்டுகோள்
கண்ணீர் சிந்துவதால்
கனவிலும் வர மாட்டேன்
என இருக்காதே
அவ்வாறு நீ இருந்தால்
இவள் உயிர் 
இனி இருக்காதே?

Comments

Popular Posts