சூத்திரத்தாரி


அவ்வளவுதானா? முடிந்தே விட்டதா?
முழு முகம் இனி காட்டாதா
கற்பனை சிறகில் காயமா?
இழப்பிற்க்கு ஈடு இறப்பா?
இடுகாட்டில் மொழி பாடமா?
கற்பனை புரவிக்கு கடிவாளமிட்டதாரோ?
என் கனவுகளை சற்ப்பம் தின்றதா?
மீனுக்கு வீசிய தூண்டில்
என் குரல்வளையில் முள் நிரடுவதேன்?
பலிபீடம் ஆட்டின் கையில் ஆயுதம் தந்ததார்?
என் ஒரு வழிப்பயணத்தில்
பாதையை சுருட்டியதார்?
நீ நேற்றை வருவயா?
சூத்திரதாரி யார் ?

Comments

Popular Posts