எய்த போதும்



இது ,
அன்றிலிருந்தே 
தேயத்தொடங்க்கியது
ஆண் உருவமும்,ஆணின இயல்பும்

வியர்வைக்கூட
அழுந்த துடைக்காது
ஒற்றியெடுக்கும் வினோதம்
கண்டு,
நடையில் கொஞ்சம்
நளினம் கண்டு,
அடுக்கலையில்
அக்கறை இருப்பது
கண்டு,

அக்காள்,தங்கை ஆடைகளை
உடுத்தி மகிழ்வது கண்டு,
கண்டு கொண்டார்கள்,
மனதில்
வஞ்சம் கொண்டார்கள்,
கெஞ்சிக்கேட்டார்கள்
மாரிக்கொள் ,
இரசாயன மாற்றம்,
இது என
அரியாது அறிவியல்
படித்தவர்கள்?

வேண்டுகோளுக்கு
செவிமடுக்காது
விரட்டிவிட்டார்கள்,
விட்டு
வெளியேறிய நாட்களில்தான்
தெரிந்தது
எம் உலகம் தனிதான் என்று,

வீதியில்,..
ஒரு பொருட்காட்சி
கோசா,ஒம்போது,
ரெண்டும்கெட்டான்
சூட்டிய பெயர்கள்,
பசி,இதயம்,மூளை என
உள்ளதை ஏற்க மறுத்த மூளிகள்,


கண்டாலே.,,,
தீண்டல்,சீண்டல்
உடல் காயங்களை விட
உள்ளக்காயம் யார் அரிவர்,
கண்ணீர் இன்னும்
ஏனோ ?மாறாது
நீராக
இருப்பதுதான் ஆச்சரியம்,?

மூன்றாம் பாலில்
பெரும்பங்குள்ளதுபோல்
விபச்சார
உதவிக்கழைக்கும்
இவர்களை என் சொல்ல,

எம் இனம் கூட்டம்
கூட்டமாய் வாழ்கிறோம்
மனிதக்கூட்டத்திற்க்கு பயந்தே
அல்லாமல் வேறென்ன?

செல்லப்பிராணியாக நாயை
கொஞ்சும் இவர்கள்,
கொஞ்சவா கேட்டோம்
வஞ்சிக்காமல் இருந்தால்
போதுமே?
எள்ளுவதை
எந்த சாமி கேட்குமோ?

எங்கும் இருக்க தடை,
இருக்கையிலும் தடை,
நீங்கள் வந்த வழி வந்தவர்கள்
நீங்கள் போகும் வழி
போகப்போகிறவர்கள்
என்பதைக்கூட
தெரியாமலா
இருக்கிறார்கள்?

பூமி பிளந்தா பிறந்தோம்?

No comments:

Post a Comment