கூடாய்
கிடைத்த ஒரு கிளையும்
முறிந்து விடும்
போல்?
கூடு தூக்கி திரிய
வேண்டும்
போல்?
பழைய கூடு
இருந்திருக்க
வேண்டும்
போல்?
இனி ஜோடி
வந்தால்
சொல்ல
வேண்டும்
போல்?
கூடாதிருக்க
வேண்டும்
போல்???
கூடு இனி
கிடைக்காது
போல்?
தொலைத்ததை தேடுதல் போல் வாழ்கையின் தேடுதல்,முடிவுக்கு வர இயலாது தொடரும்...,
Comments
Post a Comment